24 உப கிராமங்கள்

1.விக்கிரமங்கலம்

விக்கிர பாண்டியன் என்னும் மன்னனால் உருவாக்கப்பட்டதால் இது விக்கிர மங்கலம் எனப் பெயர் ஏற்பட்டது.

ஊராண்ட உரப்பனூரைச் சேர்ந்த வடமலை சுந்தத் தேவர் வம்சத்தில் பிறந்த எழுவத்தேவர் சோமத்தேவர் என்ற சகோரர்கள் கண்ணனூரில் வந்து குடியமர்ந்தனர். அவர்கள் அப்பொழுது கழுவநாத கோயில் பூசாரியாக இருந்த ராணி சோழத்தேவன் மகளை திருமணம் செய்தனர்.

தம்பி முசுமத் தேவனுக்கு ஆண்டித்தேவர் பரட்டராண்டித்தேவர் என இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆண்டித்தேவர் பாப்பாபட்டி 10 தேர்வகளுடன் பிறந்த பஞ்சாயி என்ற பெண்ணை மணந்தார்.

பழிக்குப் பழி தப்பிய ஒரே ஆண் பிள்ளை கொக்குளத்தில் திருமணம் செய்கிறார். அவருக்கு ஒரு பெண் பிள்ளையும், ஐந்து ஆண் பிள்ளைகளும் பிறக்கின்றனர்.

வம்சாவழிகளும், வணங்கும் தெய்வங்களும்

  1. ஆண்டித்தேவர் - கருமாத்தூh கழுவநாதர் கோவில்
  2. செங்குன்றத்தேவர் கருப்புக்கோவில்காவல்தெய்வம்
  3. செம்பட்டையத்தேவர்
  4. செம்பாதிக்தேவர்
  5. நல்ல பிள்ளைத்தேவர் - கருமாத்தூர் கழுவநாத கோவிலுக்கு அக்கா மக்கள்

2.நாட்டார் மங்கலம்

முதலில் வேட்டுவர்கள் வாழ்ந்து வந்தமையால் இதற்கு வேடுவர் மங்களம் என அழைக்கப்பட்டது. வேடுவர்கள் கள்ளர்களையும் கள்ளர் பெண்களையும் இழிவாக நடத்தியதால் தங்கள் பூர்வீக ஊரான வெள்ளரிப்பட்டிக்குச் செய்து அம்பலகார சகோதரர்களை அழைத்து வந்து வேடுவர் வீடுகளை தீ வைத்து அழித்து நாட்டுக்காரர்கள் உதவி செய்ததால் இதற்கு நாட்டார் மங்கலம் எனப் பெயர் வந்தது.

உலகாத்தேவர் கருமாத்தூர் பொன்னங்கன் கட்டத்தில் திருமணம் செய்தார். ஒந்தாத்தேவர் வாலாந்தூர் அங்கையர் கன்னியை திருமணம் செய்தார். அதனால் நாட்டார் மங்காத்துக்காரர்கள் வாலாந்தூர்காரர்களுக்கு அக்காள் மக்களாக கருதப்படுகின்றனர்.

பங்காளிகள் வணங்கும் தெய்வங்கள்

  1. உலகாத்தேவர்
  2. ஒந்தாத்தேவர் நாட்டார்மங்கலம் ஆதிசிவன்
  3. ஒச்சாத்தேவர்

3. அய்யனார் குளம்

அய்யர்கள் அதிகமாக வாழ்ந்ததால் இது அய்யனார்குளம் என அழைக்கப்பட்டது.அரி குரும்பன் வம்சத்தில் பிறந்த குரும்பத்தேவர் அய்யனார் குளத்தில் பரவு காவல்காரராக இருந்தார். அவர் பாப்பாபட்டி பத்து தேவருடன் பிறந்த உலகாயி என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதனால் பாப்பாபட்டிக்காரர்கள் அய்யனார் குளத்துக்காரர்களை அக்காள் மக்கள் என்று அழைக்கிறார்கள். பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழாவில் இவர்கள் தான் கிடாய் வெட்டுகிறார்கள். மேலும் கோவிலில் முதன்மை கொடுக்கப்படுகிறது.

4.கொடிக்குளம்

நல்லதங்காள் கோவில், பெருமாள்கோவில்

  1. படிவு ஒச்சாத்தேவர்,
  2. பிரவிய ஒச்சாத்தேவர்

கும்பிடும் கோவில்

கொடிக்குளத்தில் உள்ள நல்லதங்காள் கோவில் பெருமாள் கோவிலாகும். கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் அக்கா மக்கள் ஆவர்.

5. முதலைக்குளம்

முதலில் தோண்டப்பட்ட குளம் முதலைக்குளம். முதலைக்குளம் கருப்புக்கோவில் காவல் தெய்வமாகும். கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் பிடிமண் எடுத்து முதலைக்குளத்தில் கோவில் வைத்துள்ளனர்.

  1. பல்லாக்கு ஒச்சாத்தேவர் பல்லக்கு தூக்கி வந்ததனால் இவர் பல்லாக்கு ஒச்சாத்தேவர் எனப்பட்டார்.
  2. தண்டில் தூக்கி வந்ததனால் அவர் தண்டில் ஒச்சாத்தேவர் எனப்பட்டார். இவர்கள் கருமாத்தூர் ஒச்சாண்டம்மனுக்கு அத்தை

6.பன்னியான்

கருமாத்தூர் கழுவநாதர் பிடிமண் எடுத்து முத்துகருப்பண சாமி, வீரபத்திரசாமி என வணங்கி வருகின்றனர். பன்னியான் மேலத்தெரு முதல் பங்காளி

  1. ஓந்தாண்டித்தேவர்
  2. ராமகழுவத்தேவர்
  3. நல்லாண்டித்தேவர்
  4. கோடாங்கித்தேவர்
  5. நண்டுத்தேவர்

7.வடிவேல்கரை

மலையடி கருப்பத்தேவர் காவல்தெய்வமாகும். கீழக்குடியில் கழுவநாதர் கோவில் பிடிமண் எடுத்து வழிபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இது தாய்வழி தெய்வமாகும்.

பங்காளிகள்

  1. பெரியாண்டித்தேவர்,
  2. சின்னப்புலித்தேவர், குட்டிபிச்சைத்தேவர்

8.தணக்கன்குளம்

கருமாத்தூர் கழுவநாதர் கோவில், அழகர் கோவில் இவர்கள் கும்பிடும் தெய்வம் ஆகும். பங்காளிகள்

  1. பால் அழகத்தேவர்,
  2. கிறுக்காண்டித்தேவர்

9.விளாச்சேரி

கருமாத்தூர் கழுவநாதர் பிடிமண் எடுத்து வணங்கி வருகின்றனர். உடன் பங்காளிகள்

1.குப்பையாண்டித்தேவர் மக்கள்

  1. கல்யாணித்தேவர்,
  2. கழுவத்தேவர்

2.வெள்ளையத்தேவர் மக்கள்

  1. வெள்ளையத்தேவர்
  2. பெரியவெள்ளையாண்டித்தேவர்
  3. கூனன்
  4. பட்டியான்

வெள்ளையத்தேவர் மக்கள் ஆதிசிவன் கோவில் கும்பிடுகிறவர்கள்.

10.சாக்கிலிப்பட்டி

கருமாத்தூர் கழுவநாதர் பிடிமண்,(பெண் வாரிசு) கருமாத்தூர் பொன்னாங்கன் பிடிமண் எடுத்து வந்து வணங்கி வருகின்றனர்.

  1. பேய்கழுவத்தேவர்
  2. ஒச்சாத்தேவர் கருமாத்தூர் சம்மந்தவழி

11.தோப்பூர்

நாட்டாமங்கலம் ஆதிசிவன் நரசிங்கம்பட்டியில் இருந்து வந்தவர். கடம்பவன சொக்கத்தேவர் மகன்கள்

  1. மாயத்தேவர்
  2. சுப்புத்தேவர் இவர்கள்

வாலாந்தூர்காரர்களுக்கு அக்கா மக்கள்

12.சூடாபுளியங்குளம்-வேடர்புளியங்குளம்

வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி, ஆனிமுத்து கருப்புச்சாமி கும்பிடுகிறவர்கள். இவர்கள் வாலாந்தூரில் திருமணம் செய்துள்ளனர். ஆனிமுத்து கருப்புச்சாமி வாலாந்தூரில் கோவிலில் உள்ளது. சூடம் ஏற்றி வாலாந்தூர் அங்காளபரமேஸ்வரியை வணங்கியதால்

  1. சூடாப்புலியத்தேவர் என்று பெயர்.
  2. சின்னசூடாத்தேவர்

13.சாத்தன்குடி

மடப்புரம் அய்யனார் கோவில் பிடிமண் எடுத்து கருமாத்தூர் கழுவநாதர் கோவிலில் வைத்து வணங்கி வருகின்றனர்.

பங்காளிகள்:

  1. மலையபிள்ளைத்தேவர்
  2. உலகாப்பிள்ளைத்தேவர்
  3. வளர்ந்தான்பிள்ளைத்தேவர்

14.கப்பலூர்

கழுவநாதர் கோவில் பாப்பாத்தியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், கருமாத்தூர் கழுவநாதர் கோவிலை வணங்கி வருகின்றனர்.

பங்காளிகள்:

  1. இராமுத்தேவர்,
  2. கன்னிராமுத்தேவர் என்பவர் ஆவார்.

15.மேல்நாடு செட்டிக்குளம்

கருமாத்தூர் தாளைகோயில் நல்லகுரும்பன் சாமியை வணங்கி வருகின்றனர்.

  1. அண்ணன்,
  2. தம்பி

16.அல்லிக்குண்டம்

புத்தூர் வாலகுருநாதர் கோவில், பூங்குடி அய்யனார் கோவில், பட்டவர் தெய்வம் நல்லவதேவன் அவரது மனைவி வைத்து கும்பிடுகின்றனர். விருமப்பன் என்ற விரும்பிள்ளை மகன்கள்

  1. நல்லாத்தேவர்,
  2. மாயத்தேவர்,
  3. பூசாரித்தேவர்,
  4. மாசாணத்தேவர்
  5. அழகுத்தேவர்

17.மானூத்து

கருமாத்தூர் கழுவநாதர் கோயில், பெத்தனசாமி கோவில் குலதெய்வமாக வைத்து கும்பிடுகின்றனர்.

பங்காளிகள்:

  1. திருமயம் பேயத்தேவர், முதலிக்கூட்டம்.
  2. வெள்ளையன்கூட்டம் (பெத்தனசாமிகோவில்)
  3. சித்ரான்கூட்டம் (நரியம்பட்டி காத்தாண்டீஸ்வரி கோவில் பிடிமண்)

18.காளப்பன்பட்டி

கருமாத்தூர் கருப்புக் கோவில் பிடிமண் நாட்டாமங்கலம் சம்மந்தி ஆதிசிவன். பங்காளிகள்

  1. கருமாத்தூர் ஆண்டரச்சான் வம்சம்
  2. பூகலக்குன்னன்
  3. பனிக்கத்தேவர்(ஆதிசிவன்)
  4. சின்னாங்கி உடையாத்தேவர் மகன் (தும்மக்குண்டு) நாட்டாமங்கலம் ஆதிசிவன் (பிடிமண்) பெண்வழித் தெய்வம்

19.பூசலப்புரம்

கருமாத்தூர் மூனுசாமி ஒச்சாண்டம்மன் கோவில் பிடிமண். கிணற்றில் சேர் பிடிமண்ணாக எடுத்து வந்து கும்பிட்டு வருகின்றனர். பூசலப்புரத்துக்காரரும், கள்ளபட்டிகாரரும் ஒரு தாயிடம் பால் குடித்து வளர்ந்ததால் உடன்பிறப்பாக கருதுகின்றனர்.

பங்காளிகள்:

  1. கட்ராண்டித்தேவர் மகன் கட்டழகாத்தேவர்
  2. மாயத்தேவர்.
  3. ஒச்சாத்தேவர்
  4. பெரியபழிஞ்சித்தேவர்
  5. சின்னபழிஞ்சித்தேவர்
  6. பாதிக்காரர்

20.பெருங்காமநல்லூர்

நாட்டாமங்கலம் ஆதிசிவன வாகைக்குளம் கல்யாணகருப்புச்சாமி, நரியம்பட்டி காத்தாண்டீஸ்வரி, குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.

பங்காளிகள்:

  1. எர்ரமாத்தேவர்
  2. கணக்கத்தேவர்
  3. கல்யாணித்தேவர் (கீழஉரப்பனூர் பிடிமண்)
  4. சித்ராத்தேவர் (சூரியம்பட்டி. காத்தாண்டீஸ்வரி பிடிமண்)

21.மதிப்பனூர்

கருமாத்தூர் மூனுசாமி ஒச்சாண்டம்மன் பிடிமண் பூசலப்புரம் அக்கா மக்கள் மேலவளவில் இருந்து வந்தவர்கள்

பங்காளிகள்:

  1. சீறும்புலியான்
  2. கொங்காபுலியான் (பன்னியான்)
  3. ஏராப்புலியான்
  4. ஒச்சாத்தேவர்
  5. ஆண்டத்தேவர்
  6. செல்லியத்தேவர்
  7. முடக்குநாட்டான்
  8. அவியன்நரியன்
  9. கழியன்

22.கச்சராப்பு

கச்சஆப்பு(வேப்பங்குச்சி) ஊன்றி நிலத்தை தனதாக்கியது கொடிப்புலிகருப்பு (வைகையில் வந்த தெய்வம்) ஊர்காலஅய்யனார்

பங்காளிகள்:

  1. குட்டியத்தேவர் மகன் கட்டையத்தேவர்
  2. பெரியகட்டையத்தேவர் (வாரமிளகித்தேவர்) சின்னக்கட்டையத்தேவர் கொடிப்புலி

23.காடுபட்டி

சிந்துபட்டி கண்மாயில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி (வாலாந்தூர் பிடிமண்) எடுத்து வணங்கி வருகின்றனர்.

பங்காளிகள்:

  1. இராமுத்தேவர்
  2. வீரணத்தேவர்
  3. இருளாண்டித்தேவர்
  4. மாசாணத்தேவர்

பெண் வாரிசுகள்

  1. பெருமாயி
  2. வீரம்மாள்
  3. சின்னமாசானத்தேவர்
  4. செவத்தமாசானத்தேவர்
  5. கருத்துவீரர்

24.வடபழிஞ்சி

சித்தாலை சுந்தரவள்ளியம்மன் கோவிலை வணங்கி வருகின்ற வடமலை சுந்தத்தேவன் ஊராண்ட உரப்பனூர் வாகைக்குளத்தில் உள்ள ஒரு சில கிராமத்தில் சிக்கந்த மலையான் கூட்டம் (தென்கரை முத்தையா கோவில்)

இவைதவிர சடச்சிப்பட்டி சொக்கணாண்டி கூட்டம் (அங்காளம்மன்) பன்னிக்குண்டு, கண்ணனூர், குள்ளநேரி, கருமாத்தூர் கழுவநாதர் கோவில், மகன் சோழியவைரத்தேவர் ஆகியவர்களும் உள்ளனர்.