பிரமலைக்கள்ளர் குலதெய்வங்கள் - கோவில்கள்

  1. இராஜதானி
  2. 8 நாடு
  3. 24 (உப) துணை கிராமங்கள் என 3 பகுதியாக பரிபாலனம் செய்து வந்துள்ளனர்.

மேல உரப்பனூர் கண்மாய்க்கு மேற்குப் பக்கத்தில் உள்ள ஊர் மேல உரப்பனூர்.3 பெரிய தேவர் சிறிய தேவர் என 6 தேவர்கள் உள்ளனர்.

காரிபின்னத் தேவர்

காரிபின்னத்தேவர் வம்சத்தினர் புன்னூர் அய்யன் கோவிலில் பிடிமண் எடுத்து வெள்ளைமலைப் பட்டியில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

பிரமலைக்கள்ளர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயணம் செய்து பல குழுக்களாகப் பிரிந்து இந்தியாவின் தென்பகுதிக்கு வந்துள்ளனர். தற்போது வசித்து வரும் மதுரைக்கு மேற்கே ஆண்டிப்பட்டி கணவாய்க்கும் கிழக்கில் உள்ள நிலப்பகுதியில் குடியிருப்பதற்கு முன், மேலூர் வெள்ளாபட்டி நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ளனர்.

  1. பத்திரக்காளி சுந்தரதேவர்-சித்தாலை சுந்தரவள்ளியம்மன் கோவில்
  2. வெள்ளையத் தேவர்-விளாச்சேரி சிவன் கோவில்
  3. கரைகாரந்தேவர் கருமாத்தூர் கழுவநாதர் கோவில்

ஊரண்ட உரப்பனூர்

கண்மாய்க் கரைக்கும் வடக்கே அமைந்துள்ளது. வடமலை சுந்தத்தேவர் வகையறா வாழ்ந்து வருகின்றனர். பள்ள சுந்தத்தேவர் வடமலை சுந்தத்தேவர் எனப்பட்டார்.

வடமலை சுந்தத்தேவருக்கு 4 மக்கள்

  1. பெத்தன சுந்தத் தேவர்
  2. குப்பன சுந்தத்தேவர்
  3. சுந்தப்பிள்ளை சுந்தத்தேவர்
  4. கோலி வயிர சுந்தத் தேவர்

குலக்கோயில்கள்

பள்ளசுந்தன் என்ற வடமலை சுந்தத் தேவர் பட்டவர் தெய்மாகவும், சித்தாலை சுந்தரவள்ளியம்மனை குலதெய்வமாகவும் வணங்கி வருகின்றனர்.

8 நாடு பங்காளிகள் குலதெய்வங்கள்

1. திடியன் நாடு: இது முதல் நாடு என கூறப்படுகிறது. திடியன் தூங்கதேவன் முதல் முதலில் குடியேறிய கள்ளர் என்பதனைக் கொண்டு அவர் வாழ்ந்த பகுதி முதல் நாடு எனக் கூறுவர். தற்போது வெறும் பெயர் பலகையில் எழுதிக் கொள்வதை தவிர வேறு எந்த வகையிலும் முக்கியத்துவம் இல்லை. நவீன இந்தியாவில் இதனை ஒரு சர்ச்சையாக கருத அவசியம் இல்லை.

  1. திடியன் கைலாசநாதர் கோவில்
  2. திடியன் மலைராமன் கோவில்
  3. திடியன் சோனை முத்தையா கோவில்
  4. திடியன் வாலகுருநாதர் கோவில்
  5. திடியன் தென்கரை முத்தையா கோவில்
  6. உச்சப்பட்டி பதினெட்டாம்பட்டி கருப்பு கோவில்
  7. உச்சப்பட்டி தென்கரை முத்தையா கோவில்
  8. வலங்காகள்ம அழகர் கோவில்
  9. வலங்காகுளம் கண்ணாத்தாள் கோவில்
  10. வலங்காக்குளம் அரிக்கும்மன் கோவில்
  11. மேலசெம்பட்டி கருப்பு கோவில்
  12. பெரியாண்டவர் கோவில்

பங்காளிகள்

  1. காமாட்சித் தேவர் (அம்பட்டையன்பட்டி) சோனை முத்தையா கருப்பு கோவில்
  2. ஏராத்தேவர் (அம்பட்டையன்பட்டி)
  3. நல்லாத்தேவர் (அம்பட்டையன்பட்டி) -வாலகுருநாதர் கோவில் பெத்தராமுத்தேவர் தென்கரைமுத்தையா கோவில்(மலைக்கு வடக்கு)
  4. பெரிய பிச்சைத்தேவர்-உச்சப்பட்டி18ம்படி கருப்புக் கோவில்
  5. பேயாண்டித்தேவர் கருமாத்தூர் கழுவநாதர் கோவில்
  6. வசகழுவத்தேவர் சீலைக்காரி அம்மன் கோவில்
  7. வாரமிளகித்தேவர் -உச்சப்பட்டி தென்கரைமுத்தையா
  8. பூண்டத்தேவர், மெய்யத்தேவர்-வலங்காகுளம் அழகர் கோவில், கண்ணாத்தாள் கோவில் இவர் அக்கா மகன்
  9. அறிகுரும்பத்தேவர் கருமாத்தூர் நல்லகுரும்புடையார்

2. வாலாந்தூர் நாடு கோவில்கள், பங்காளிகள் வாலாந்தூரை, தலைமை இடமாக கொண்ட பகுதிகள் ஆகும். ஒரு தாய்க்கு பிறந்த 2 குழந்தைகளில் காட்டு வெளியில் தவறிச்சென்ற சடப்புலியை சராசரி மனிதனாக்க திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு பிறந்த மகனுக்கு கருமாத்தூரில் திருமணம் செய்தனர். அவருக்கு நான்கு ஆண் 3 பெண் பிள்ளைகள். மூத்தாவர் மொந்த குட்டித்தேவர் சங்கம்பட்டியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அங்காளம்மனை குலதெய்வமாக வழிபடுகின்றனர்

வாலாந்தூர் நாடு கோவில்கள்

  1. வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோவில் - பொது தெய்வம்
  2. ஆரியப்பட்டி கல்யாண கருப்பு கோவில்
  3. இராமநாதபுரம் கல்யாண கருப்புக் கோவில்
  4. சங்கம்பட்டி அங்காள ஈஸ்வரி கோவில்
  5. சொக்கத்தேவன்பட்டி அய்யனார் கோவில்
  6. சக்கலியங்குளம் பெத்தனசாமி கோவில்
  7. கன்னியம்பட்டி காமாட்சி அம்மன் கோவில்

பங்காளிகள் 4 பேர் கும்பிடும் கோவில்கள்

  1. சின்னுவீரத்தேவர் - ஆரியபட்டி கல்யாண கருப்புசாமி
  2. கட்டமுத்துத்தேவர் சொக்கத்தேவன்பட்டி அய்யனார் கோவில்
  3. வெள்ளையாண்டித்தேவர்- சக்கிலியன் குளம் பெத்தனசாமிகோவில்
  4. சின்னக்காமுத்தேவர்-கன்னியம்பட்டி காமாட்சியம்மன் கோவில்

சகோதரிகள் 3 பேர்

  1. வீரம்மாள்(வீரக்காள்) - வீரம்மாள் மகன் காடுபட்டி- வீரணத்தேவர் (பிடிமண் கோவில்) திருமணம் செய்தார்
  2. அங்கயற்கண்ணி (கருப்பாயி) - நாட்டாமங்கலம் (மக்கள்) அக்கா மகன் சர்க்கரைக்கு திருமணம் செய்வித்தனர்
  3. முத்துப்பேச்சி - சூடாப்புளியங்குளத்தில் சூடாத்தேவனுக்கு திருமணம் செய்தனர். தெய்வம் அங்காளஈஸ்வரி

3. புத்தூர் நாடு கோவில்கள்: புத்தூர் என்ற கிராமத்தைத் தலைமை இடமாகக் கொண்ட நாடு. இந்நாடு 4 வேறுபட்ட வம்சா வளிகளைக் கொண்ட நாடு ஆகும். ஒவ்வொரு வம்சாவளியினரும் ஒருகரை எனப்படுவர்.

  1. பின்னத்தேவர் கரை
  2. இராமசாமித்தேவர் கரை
  3. ஒச்சான் படிவுத்தேவர் கரை
  4. பெரும்புலி அழகாத்தேவர் கரை

கோவில்கள்

  1. புத்தூர் வாலகுருநாதர் கோவில்
  2. நல்லுத்தேவன்பட்டி துர்க்கையம்மன் கோவில்
  3. நல்லுத்தேவன்பட்டி பூங்கொடி அய்யன் கோவில்
  4. புத்தூர் வாலகுருநாதர் கோவில்

பங்காளிகள் கும்பிடும் கோவில்கள்

  1. பின்னத்தேவர் கரை- பெரியபின்னத்தேவர்- நல்லுத்தேவன்பட்டி கண்மாய்கரை பூங்கொடி அய்யனார் கோவில்
  2. இராமசாமித்தேவர்-சின்னக்கா அம்மன் (கழுவநாதர் கோவில்)
  3. ஒச்சான் படிவுக்கரைத்தேவர்-நல்லதங்காள் கோவில்
  4. பெரும்புலி அழகாத்தேவர்-வடுகபட்டி கருப்புக் கோவில் நவலார்பட்டி அய்யனார் கோவில்

4. கருமாத்தூர் நாடு கோவில்கள்: கள்ளர் நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால் பெறுவாரியான வம்சாவளியினர் நடுநாடு எனவும் கொள்ளலாம். இதனை வழிபாட்டு தலைமையகம் எனவும் கூறலாம். பிரமலைக் கள்ளர்களின் வேண்டும். இங்குள்ள கோயில்களையே தங்களது குலக் கோயில்களாக வழிபடுகின்றனர். பங்காளிகளும், மைத்துனர்களும் வழிபடுகின்றனர். இதனை கவனமாக பார்த்து அறிய வேண்டும்.

  1. கருமாத்தூர் கோவில்கள்
  2. கருமாத்தூர் கழுவநாதன் கோவில்
  3. கருமாத்தூர் அங்காள அய்யன்
  4. ஒச்சாண்டம்மன் கோவில்
  5. கருமாத்தூர் கடசாரி நல்லகுரும்பன் கோவில்
  6. கருமாத்தூர் கோட்டை மந்தை கருப்பு கோவில்
  7. கருமாத்தூர் விருமன் பேச்சி கோவில்
  8. கருமாத்தூர் காக்குவீரன் கோவில்
  9. கருமாத்தூர் நல்லமாயன் கோவில்
  10. க.செட்டிகுளம் ஒச்சாண்டம்மன் கோவில்
  11. க செட்டிகுளம் கொடிப்புலி கருப்பு கோவில்
  12. எழுவம்பட்டி ஒச்சாண்டம்மன் கோவில்
  13. கருமாத்தூர் ஒய்யண்டம்மன் கோவில்

குரும்பத்தேவர் கூட்டம் கோவில்

  1. ஒய்யான் குரும்பத்தேவர் - கடசாரி நல்லகுரும்பன் கோவில்
  2. உடையன் குரும்பத்தேவர்- கடசாரி நல்லகுரும்பன் கோவில்
  3. பெரிய குரும்பத்தேவர்
  4. பேக்காத்தி குரும்பத்தேவர் மண்ணுலகத்தேவர் கூட்டம்

மதயானைக்கூட்டம்

6 பங்காளிகள்

  1. மதயானைத்தேவர்- பொன்னங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் கோயில்
  2. சின்னுடையாத்தேவர்
  3. கொள்ளித்தேவர்
  4. ஆண்டரச்சான்தேவர்
  5. கடராண்டி
  6. பூலித்தேவன்(புளுத்தான்)

கேசவனத்தேவன் கூட்டம் - கின்னிமங்கலம் காக்குவீரன் கூட்டம்

  1. மாங்காயன் கருப்பத்தேவர் - கருமாத்தூர் காக்குவீரன் கோவில்
  2. வெள்ளக் கருப்பத்தேவர்
  3. குள்ளக்கருப்பத்தேவர்
  4. பேக்கருப்பத்தேவர்
  5. சித்ரா செகுட்டுத்தேவர்
  6. பரதேசித்தேவர்
  7. போராண்டித்தேவர்

பெரியகோவில் பொன்னங்கன் வாயிலில் உள்ள தெய்வங்கள்

1
2
3

சாலைக்கும் தெற்கே உள்ள கடசாரி நல்லகுரும்பன் தாழைக்கோவில்

1
2

கழுவநாதர் கோவில்

1
2
3

காக்குவீரன் கோவில்

1
2
3

5. பாப்பாபட்டி நாடு கோவில்கள் பங்காளிகள் 10 பேர் ஒரு சேர வணங்கும் தெய்வம் மூத்தவர் பகாத்தேவர் இளையவர் கீரித்தேவர். பகாத்தேவருக்கு கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் கோவில் பூசாரி ஆண்டரச்சான் மகள் ஆண்டாயியை திருமணம் செய்தார். அவர்களுக்கு 8 ஆண்பிள்ளையும் உலகாயி என்ற ஒரு பெண்ணும் பிறந்தனர். கீரித்தேவருக்கு எருமாறுபட்டியில் திருமணம். அவர்களுக்கு 2 ஆண் பஞ்சாயி என்ற பெண் குழந்தை பிறந்தது.

ஆண்டாயி தனது தகப்பன் கோவிலான கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் கோவிலுக்கு தன் கொழுந்தன் கீரித்தேவர் மனைவியுடன் சென்று சாமிக்குப் பொங்கல் வைத்தனர். தன் பொங்கல் பானையில் இருந்த 2 கரண்டி அரிசியை பொதுவான தெய்வத்திற்கு எடுத்துக்கொள். கொழுந்தன் மனைவி பானையிலிருந்து எதுவும் எடுக்க வேண்டாம் எனக் கூறினார். அதனை ஏற்காது இருவர் பொங்கல் பானையிலிருந்து ஒரு ஒரு கரண்டி வழக்கப்படி எடுத்தனர்.

கோபம் கொண்ட ஆண்டாயி கொதி பானையுடன் ஓடினார். தெய்வம் அவருடன் செல்வதையும் அறிந்தனர். அறிந்த அவர் சகோதரர்கள் மேலும் ஒரு சிலரோடு உடன் சென்றனர். பாப்பாபட்டி புளியந்தோப்பில் வந்து பானையை இறக்கி வைத்து நான் தான் ஒச்சாயி கிழவி பேசுகிறேன் எனக்கூறி அருள்வாக்காக என் தம்பி ஆண்டரச்சான் கோவில் பூசாரியாகவும், கொட்டடித்து வந்த பிரம்பன் உடன் கோவிலில் உதவியாகவும் இருந்து ஒச்சாண்டம்மனை 10 பேர்களும் வணங்கி வருகின்றனர்.

பங்காளிகள்

தென்கிரி கழியக்காள் 5 குழந்தைகள்

  1. பகாத்தேவன்
  2. கீரித்தேவன்
  3. வடவீரன்
  4. நைனாபிள்ளை
  5. பெயர் தெரியவில்லை

பகாத்தேவன் ஆண்டாயி மக்கள்

  1. மோளத்தேவர்
  2. ஒச்சாத்தேவர்
  3. சுளி ஒச்சாத்தேவர்
  4. கட்டக்காளை தேவர்
  5. உடையாத் தேவர்

பெண் பிள்ளை

  1. உலகாயி-அய்யனார் குளத்தில் திருமணம்
  2. பஞ்சாயி(ஐந்தாவதாகப் பிறந்தவர்) ஆண்டித் தேவர் விக்கிரமங்கலத்தில் திருமணம்
  3. பெண் தனக்கன்குளம்-பால் அழகத் தேவருக்குத் திருமணம்

கீரித்தேவர் விருமாயிக்குப் பிறந்த குழந்தைகள்

  1. கிரித்தேவர் என்ற கீரித்தேவர்.
  2. கூலத்தேவர் (கூழையத்தேவர்)

மொத்தம் 10 ஆண் வாரிசுகள்: எல்லோரும் வணங்கும் ஒரே தெய்வம் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன்ஃ ஆண்டாயி ஆச்சிகிழவி கருமாத்தூரிலிருந்து உடன் வந்த தெய்வம். குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.

6. கொக்குளம் நாடு கோவில்கள்: கொக்குளம் கிராமம் இதன் தலைமை கிராமம். மேலூர் நரசிங்கம்பட்டியிலிருந்து அம்பலகாரர்களுடன் மனவேறுபட்டு நரசிங்கத்தேவர், வெள்ளைபின்னத்தேவர் அவ்வூரிலிருந்து தங்கள் குலதெய்வமான ஆதிசிவன், அய்யனார் கோவிலிலிருந்து பிடிமண் எடுத்து தங்களுடைய மைத்துனர்கள் உரப்புலியத்தேவர் உறங்காபுலித்தேவர் மற்றும் அவ்வூர் பறையர் சமூகத்தைச் சேர்ந்த மூவரும் தங்களுடைய குலசாமிகளான சின்னச்சாமி, சீலக்காரி கோயில்களது பிடிமண் எடுத்துக் கொண்டு வந்தனர். கொக்குளத்தில் குடி ஏறினர். கொக்குளம் நாடு ஒரே பங்காளிகளைக் கொண்ட நாடாகும். 6 வம்சாவளியினர் உள்ளனர். அதனால் கொக்குளம் ஆறுகரை எனப்பட்டது. ஆதிசிவன் கோவிலை குலக்கோயிலாக வணங்கி வருகின்றனர். தனித்தனி கோவில் கட்டி வணங்கி வருகின்றனர்.

கும்பிடும் கோயில்கள்

  1. கொக்குளம் பேக்காமன் கருப்புசாமி கோவில்
  2. கொக்குளம் ஆதிசிவன் கோவில்-சாலைக்கும் தெற்கு
  3. கொக்குளம் ஆதிசிவன் கோவில்-சாலைக்கும் வடக்கு
  4. கொக்குளம் ஆதிசிவன் கோவில்
  5. கொக்குளம் காமாட்சி அம்மன் கோவில்
  6. தேங்கல்பட்டிமாயன் கோவில்
  7. கருமாத்தூர் கழுவநாதர் கோவில்

பங்காளிகள் கும்பிடும் கோவில்கள்

  1. வெறியத்தேவன் கரை - கொக்குளம் ஆதிசிவன்
  2. கட்டப்பின்னத்தேவர் கரை
  3. கருப்பத்தேவர் கரை கொக்குளம் ஆதிசிவன் கோவில்
  4. சேத்தூரான் கரை
  5. சடச்சிகரை - கருமாத்தூர் கழுவநாதர் கோவில்
  6. கன்னித்தேவர் கரை - காமாட்சியம்மன் கோவில்

பெண்

சிவனம்மாள்-பன்னியானில் திருமணம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது வேப்பனூத்து நாடு. அதன் அருகில் உள்ளது கள்ளபட்டியாகும். திருமலை பின்னத்தேவர், எட்டு நாட்டிற்கும் தலைவர் பெரியதேவர் ஆவார். அவர் வடமலை சுந்த் தேவர் மகளைத் திருமணம் செய்து ஆண் மாயவனம் மதிப்பனூருக்கு ஒரு பஞ்சாயத்துக்கு குதிரையில் செல்லும்போது வெற்றிலை எச்சி மாயத்தேவர் மகள் மாயவனம் என்ற பெண் மீது தவறுதலாகப் பட்டுவிடுகிறது.

மாயவனம் என்ற பெண் இராசாதிராசா எச்சில் என் மீது பட்டது. எனவே அவர்தான் எனக்கு கணவர் எனக் கூறி ஊர் பஞ்சாயத்தில் அந்தப் பெண்ணை திருமலை பின்னத் தேவரே இரண்டாந்தாரமாக கட்ட வேண்டிய கடடாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஒரு ஆண் ஆதிபின்னத்தேவர் பிறந்தான். மூத்ததாரத்து மக்களுடன் சண்டையிட்டு அவனை கொலை செய்துவிட்டனர்.

அவர் இறக்கும்போது மனைவி கற்பவதி அவருக்கு ஒரு ஆண் குழந்தை அவருக்கு ஆதி வெள்ளைப் பின்னத்தேவர் என்ற பெயர். அக்காள் இறந்தபின் தங்கை அவனை எடுத்து பாலூட்டி வளர்த்தார். நல்லுத்தேவன்பட்டி துரை வெள்ளைப் பின்னத் தேவர் மகளை திருமணம் செய்து வாழ்ந்தார்.

அவரது மனைவி எல்லா உதவியும் செய்த என் தந்தை எனக்கு வணங்குவதற்கு தெய்வமும் குடியிருக்க ஊரும் வேண்டுமெனக் கூற துரை பின்னத்தேவர் கடுகாஞ்சி நாயக்கர் வாழ்ந்த ஊர் வேப்பனூத்து அதன் பக்கத்தில் இவர் கள்ளன் ஒருவன் வாழ்ந்தாவ சன்னபட்டி எனப் பெயர் வந்தது. வணங்குவதற்கு "மலைராமன்" தெய்வத்தையும். கொடுத்தனர். கண்மாய்கரையின் மேல் உள்ளது.

  1. வெண்டிமுத்தையா காவல்தெய்வம்
  2. புன்னூர் அய்யன் உரப்பனூரிலிருந்து பிடிமண் எடுத்து வணங்கி வருகின்றனர்.

7.வேப்பனூத்து நாடு பங்காளிகள் குல கோயில்கள்

  1. வெள்ளைப்பினத்தேவர் மலைராமன் கோவில்
  2. நல்லாத்தேவர் வெண்டிமுத்தையாகோவில்
  3. மாயக்கட்டத்தேவர் புன்னூர் அய்யன்

8. தும்மக்குண்டு நாடு: தும்பை நாயக்கர் வாழ்ந்த ஊர் ஆகையால் இது தும்மக்குண்டு நாயக்கருக்கு பாதுகாப்புக்காக சின்ன உடையாத்தேவர் தொல்லை கொடுத்த பணிக்கர் இனத்தை அழைத்தார். இவருக்கு இரண்டு மனைவிகள், மூத்ததாரத்து மகனுக்கு உரிமை கிடைக்கிறது. இவர் சித்தாலை சுந்த்தேவர் மகளை திருமணம் செய்து மூன்று பிள்ளைகள். அதிருப்தி அடைந்த பணிக்கத்தேவன் கோபம் கொண்டு காளப்பன்பட்டி குடி அமர்ந்தான்.

  1. சின்னாங்கி உடையாத் தேவர்
  2. கருத்த ஒச்சாத்தேவர்
  3. வெள்ளை ஒச்சாத்தேவர்

கும்பிடும் குலதெய்வங்கள் கோவில்கள்

  1. உடையான்பட்டி ஒச்சாண்டம்மன் கோவில்
  2. தும்மக்குண்டு ஒச்சாண்டம்மன் கோவில்
  3. கரிசல்பட்டி ஒச்சாண்டம்மன் கோவில்
  4. பழனிபட்டி ஒச்சாண்டம்மன் கோவில்
  5. பிச்சம்பட்டி ஒச்சாண்டம்மன் கோவில்
  6. எஸ்.போத்தம்பட்டி ஒச்சாண்டம்மன் கோவில்
  7. கேத்துவார்பட்டி ஒச்சாண்டம்மன் கோவில்
  8. காளப்பன்பட்டி தும்மக்குண்டு கருப்பு கோவில்
  9. காளப்பன்பட்டி ஆதிசிவன் கோவில்

பங்காளிகள் கும்பிடும் கோவில்கள்

  1. சின்னாங்கி உடையாத்தேவர்-மூனுசாமி
  2. கருத்த ஒச்சாத்தேவர்
  3. வெள்ளை ஒச்சாத்தேவர்
  4. கருத்த ஒச்சாத்தேவர் மரபு-முருகன்
  5. கந்தன் கூட்டம்
  6. குன்னத்தேவர்
  7. பணிக்கத்தேவர்
  8. சிந்துபட்டி காடுபட்டி அரிதிவீரத்தேவர் அங்காள ஈஸ்வரி (பிடி மண்)