பிரமலைக் கள்ளர் வரலாறு

பிரமலைக்கள்ளர் இனம் பிறப்பாலும், வீரத்தாலும், தெய்வ வணக்கத்தாலும், பாசத்தாலும் சிறந்து விளங்குவதற்குக் காரணம் அவர்கள் பூர்வகுடியினர் விஞ்ஞானப்பூர்வமாக எம்130 செம்மரபு மரபணு ஒரு காரணம். 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு உன் ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதனின் மரபணு தற்போது உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் ஜோதிமாணிக்கத்தைச் சேர்ந்த கனினி பணியாளர் விருமாண்டி மரபணுவுடன் ஒத்து போகிறது என்ற உண்மையை "நேஷனல் ஜியோக்ரபி" என்ற டிவியில் ஒளிபரப்பி உலகம் அறியச் செய்துள்ளனர்.

பிரமலைக்கள்ளர் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயணம் செய்து பல குழுக்களாகப் பிரிந்து இந்தியாவின் தென்பகுதிக்கு வந்துள்ளனர். தற்போது வசித்து வரும் மதுரைக்கு மேற்கே ஆண்டிப்பட்டி கணவாய்க்கும் கிழக்கில் உள்ள நிலப்பகுதியில் குடியிருப்பதற்கு முன், மேலூர் வெள்ளாளப்பட்டி நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ளனர்.

பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு சூழலில் வந்து குடி அமர்ந்துள்ளனர். குடும்பங்களாக தெய்வ வழிபாடு, குடும்ப வழிபாடு செய்து வந்தனர். பல குடும்பங்கள் ஒரு குலமாகப் பெருகும்போது கும்பிடுகிற தெய்வம் குலதெய்வம் எனப்பட்டது.

ஒரே குலதெய்வத்தை வணங்குகிறவர்கள் ஆண் வழியினராயின் பங்காளிகள் எனப்பட்டனர். அவ்ரகள் உடன்பிறப்புகள் சொத்தில் பங்கு பெறுபவ்ரகள் பங்காளிகள் எனப்பட்டனர்.

பிரமலைக்கள்ளர் இனத்தைச் சேர்ந்த நம்மவர் ஆண் தெய்வங்களையும், பெண் தெய்வங்களையும் வணங்கி வருகின்றனர். உடன்பிறந்த பெண்மக்கள் திருமணம் செய்து கொடுக்கும்போது சீதனமாக தெய்வத்தையும் கொடுத்து சிறப்பு செய்துள்ளனர். ஆண்வழி தெய்வம் எனவும், பெண்வழி தெய்வம் எனவும் உள்ளது. ஒரே தெய்வத்தை பிடிமண் எடுத்து தங்கள் ஊருக்கு சென்று வைத்து வணங்கி வருகின்றனர்.

நமது சமூகத்தின் வரலாற்றினை குடும்பத்தில் ஒவ்வொருவரும் அறிந்திருப்பது மிக முக்கியம். குடும்பத்தலைவர் இதனைக் கூறி இனத்தின் மேல் ஒரு பற்றுதல் உண்டாக்க வேண்டும். நம்மவர் கிறிஸ்தவ மதத்தை தழுவியவர்களும் கூட இதனை நன்கு அறிய வேண்டும்.

ஒரு குலதெவத்தை வழிபடுகின்ற சகோதரர்கள், ஆதியில் உள்ளவர்களை வைத்து அதன் வம்சாவழியினர் என்று அழைக்கப்படுகின்றனர். பல்வேறு குழுக்களுடன் போர் புரிந்து தனித்தனியே வாழ்ந்தாலும் பிரமலைக்கள்ளர் இனம் யாருக்கும் அடிமையாகாது கப்பம் கட்டுதல் இல்லாது, தன்னரசு நாடாக அமைத்துக் கொண்டனர். அதன்படியே,

  1. இராஜதானி
  2. 8 நாடு
  3. 24 (உப) துணை கிராமங்கள் என 3 பகுதியாக பரிபாலனம் செய்து வந்துள்ளனர்.