பிரமலைக் கள்ளர் திருமண உறவின்முறை

குடும்பத்தில் தந்தை, தாய் திருமண உறவு. தந்தை வழி உறவினர் பங்காளிகள், தாய் வழி உறவுகள், சம்பந்த வழி உறவு ஆதியிலிருந்தே இந்த உறவுமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

பங்காளிகள் திருமண உறவு வைக்க கூடாது. தனது அத்தை, மாமன் வகையில் திருமணம் செய்வது வழக்கம். ஒரு சில காரணங்களால், திருமண உறவு மாறி விடுவதும் உண்டு என்றாலும் மணமகனின் தாயும், மணமகளின் தாயும் ஒரே குலதெய்வத்தை வணங்குகிறவர்களாய் ஒரே காணிக்கை காரர்களாகவும் இருக்கக் கூடாது.

ஒரே ஊரில் உள்ள ஒரே தெய்வத்தை வணங்குகிறவர்கள் திருமண உறவுமுறை உண்டு. அவர்களின் காணி (ஆதி ஊர்) பார்க்க வேண்டும் பெண்ணும் கொடுத்து சாமியையும் கொடுத்து வணங்கிச் செல்கின்றனர்.

எடுத்துக்காட்டாக கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் கோவிலை வழிபடுகின்ற பெண் வழி கொண்டவர்கள், ஒச்சாண்டம்மன் பெரிய தடியன், சின்னத்தடியன். பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலை 10 தேவர்களும், அவர்கள் தாய்மாமன் ஆண்டரச்சான் வகையராவும் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலை வணங்குகிறவர்கள் அவர்களுக்குள் சம்மந்த வழிமுறை உண்டு. ஆண்டரச்சான் பூசாரி கருமாத்தூர் காணிக்காரர் என்பதனை அறிய வேண்டும்.

நமது இனத்திற்குள் பங்காளிகள் பகுதி 1-இல் உள்ளவர்கள், பகுதி 2-இல் உள்ளவர்கள், பகுதி 1-இல் உள்ளவர்களுடன் ஆதி முதல் திருமண உறவு வைத்துள்ளனர். நமது பிரமலைக்கள்ளர் ஒரே சமயத்தில் ஒட்டுமொத்தமாக வந்து இப்பகுதியில் குடியேறவில்லை. பல வருடங்கள் தொடர்ந்து சிறுக சிறுக குடியேறியவர்கள். இவர்கள் வணங்குகின்ற கோயில்கள் அடிப்படையில் தங்களுக்குள் திருமண உறவுகளை உருவாக்கிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அதனால் யார் யாருடன் திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டனர் என்பதனை முழுமையாக அறிவது கடினம்.

ஆனால் யார் யாருடன் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை என்பதனை அடையாளப்படுத்துவது எளிமையாக இருக்கும். இவர்கள் ஒரு சில குழுக்களோடு மட்டும் திருமண உறவு வைத்துக்கொள்வதில்லை, மற்ற குழுக்களோடு திருமண உறவு வைத்துள்ளனர்.

அறிவியல் ரீதியாக தற்போது எம். 130 மரபணு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆண்கள் வழியாகவே வந்து கொண்டிருக்கிறது. இந்தக் குழுக்கள் தங்கள் இனத்தின் மரபணுக்களை காத்து வருகின்றனர் என்பது விளங்குகிறது.

வ.எண் பங்காளிகள் கோவில்கள்
1 பாப்பாபட்டி 10 தேவர்கள் கீரித்தேவர், கூழத்தேவர் மதிப்பனூர்காரர்களை உடன்பிறப்புகளாக கருதுகின்றனர். பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில்
2 வாலாந்தூர் 4 ஊர்
அ.ஆரியபட்டி
ஆ.சொக்கத்தேவன்பட்டி
இ.சக்கிலியன்குளம்
ஈ.கன்னியம்பட்டி
சங்கம்பட்டி மூத்தவர்
அங்காள பரமேஸ்வரி
கல்யாண கருப்புச்சாமி
அய்யனார் கோவில்
பெத்தனசாமி கோவில்
காமாட்சி அம்மன் கோவில்
அங்காள பரமேஸ்வரி
3 கொக்குளம் 6 கரை கொக்குளம் ஆதிசிவன் கோவில்
4 படிவு கூட்டத்தார் கொடிக்குளம் நல்லதங்காள்
நாவலார்பட்டி நல்லதங்காள்
5 சின்ன தடியன், பெரியத டியன் கூட்டத்தார் கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் கோவில்
6 பிரவியம்பட்டி கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் பாப்பாபட்டி போன்ற இடங்களில் எடுத்துசென்று பெண் வழியில் வந்த தெய்வமாய் வணங்குகிறவர்கள் பங்காளிகள்
7 நல்லுத்தேவன்பட்டி பூங்குடி அய்யனார் (கண்மாய்கரை) பின்னத்தேவன் வகை